(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கிரிக்கெட் சங்கம் பெருமையுடன் நடாத்திய மருதமுனைக் வெற்றிக் கிண்ணத் தொடரில் மருதமுனையில் உள்ள 21 அங்கத்துவ கழகங்களை உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 16ம் திகதி இறுதிப்போட்டியும் பரிசளிப்பும் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் மருதமுனை பிரிஸ்பேன் மற்றும் அஸ்னல் ஆகிய பலமான கழகங்கள் தெரிவாகியிருந்தன. பிரிஸ்பேன் அணி ஆரம்பபோட்டில் எலைட் அணியையும் காலிறுதிப் போட்டியில் ரொபி வாரியர்ஸ் அணியையும் அரையிறுதியில் மருதம் அணியையும் வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகியருந்தது. அதே போல அஸ்னல் அணியினர் ஆரம்ப போட்டியில் ஜாயா அணியையும் காலிறுதி போட்டியில் கோல்ட்மைன்ட் அணியையும் அரையிறுதிப் போட்டியில் ஜமைக்கன்ஸ் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிறுந்தது.
இறுதிப்போட்டியில் அஸ்னல் அணியுடன் விளையாடிய பிரிஸ்பேன் அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அஸ்னல் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 55 ஓட்டங்களைபெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.
56 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேன் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சஸ்னியின் சிறப்பான ஆரம்பத்தோடு ஹனாம், றினோஸின் அதிரடி துடுப்பாட்ட உதவியோடு 6.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 56 என்ற இலக்கை அடைந்து சம்பியன் அணியாக தெரிவானது.
இரண்டாவது முறையாகவும் மருதமுனைக் வெற்றிக் கிண்ணசம்பின் அணியாக முடிசூடிக்கொண்டது. கடந்தாண்டு நடைபெற்ற கிரிக்கெட் சங்க இறுதிப்போட்டியில் கல்பனா அணியினரை வீழ்த்தி சம்பியனாகியிருத்து.
சஸ்னி,அல்ஜர்ப், ஹனான் ஆகியோர் ஆட்டநாயகன்களாகவும் இறுதிப்போட்டி ஆட்டநாயகனாக றினோஸ்ஆகியோரும் தெரிவாகி இருந்தனர். மேலும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அஸ்னல் அணியின் இக்னாஸ் தெரிவானதுடன் தொடரின் சிறந்த பந்துவாச்சாளராக பிரிஸ்பேன் அணியின் அகாஸ் தெரிவாகினர். அணித்தலைவர் ஜீஸானின் சிறந்த ஈடுபாட்டோடு பிரிஸ்பேன் நிர்வாகத்தின் வழிநடத்தலில் மீண்டுமொருமுறை சம்பியனாகியது பிரிஸ்பேன் கழகம்.
மருதமுனை கிர்க்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் யூ.எஸ்.சமீம் தலைமையில்நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆபிதா Handloom நிறுவனத்தின் தலைவர் நசீர் மற்றும் அதன் முகாமையாளர் எம்.என்.இஸட்.ரூமி ஆகியோர் கலந்து கொண்டதுடன், கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ் , பொருளாளர் எம்.எம்.சறூக், பிரதித்தலைவர்களான ஏ.ஆர்.எம்.உவைஸ், ஏ.எம்.எம்.றியாஜத் மற்றும் சங்கத்தின் சுற்றுப்போட்டிக்குழு தவிசாளர் ஏ.எம்.எம். அன்ஜி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்