மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும்; இன்று(15) வெள்ளிக்கிழமை அமூக வரவேற்பளிக்கப்பட்டது.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரை மட்டக்களப்பில் ஆதராவாளர்கள் ஒன்றிணைந்து பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்றனர்.
2020இல் தமிழரசுக்கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே தெரிவாகிய நிலையில், இவ்வருடம் மூன்றுபேர் தமிழரசுக்கட்சி சார்பில் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் அதிக கூடிய விருப்பு வாக்குளை (65458) இரா.சாணக்கியன் பெற்றுள்ளார்.
(P.P)