யாழில் மண்ணை கவ்விய சு.மா.து

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை ​தோல்வியை தழுவியுள்ளார்.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேரத்ல் நேற்றியதினம் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குள எண்னப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரன் தோல்வி பெற்றதாக கூறப்படுகின்றது. அதேவேளை நாடாளுமன்றம் செல்ல தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.