கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான லெவிசேவ் நிகோலே அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளராக கலந்து கொண்ட இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் .சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் இருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம், சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளராக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த லெவிசேவ், சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் என்ற வகையில் பல நாடுகளின் தேர்தல்களை அவதானித்துள்ளதாகவும், இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டம் எந்தளவிற்கு பொருத்தமானது என்பதை அவதானிப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று காலை திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதுடன், பாராளுமன்ற தேர்தல் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகத்தை அவதானித்ததுடன் தேர்தல் நிறைவடைந்த பின்னர் சர்வதேச பார்வையாளராக தேர்தல் தொடர்பான அவதானிப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.