2024.11.14 ந் திகதி நடைபெறும பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் 98 வாக்கு சாவடிகளில் 90607 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக புதன்கிழமை (13) முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குபெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு க.கனகேஸ்வரன் அவர்கள் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு.வே.சிவராஜா அவர்களின் முன்னிலையில் இவைகள் மிகவும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் இந்த பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் 2166 அரச அதிகாரிகளும் 563 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்
வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் 4171 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் இம் மாவட்டத்தில் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.