களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் குருதிக்கொடை நிகழ்வு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த இரத்ததான நிகழ்வு இவ் வருடம் 7வது தடவையாக பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது கடந்த திங்கட்கிழமை ( மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை )
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது .

விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர் .