இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் இல 05 இல் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் காரைதீவு பிரதேச முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஊர்களில் ஊர் கூடி ஆதரிக்க முடிவெடுத்துள்ளன.
திராய்க்கேணி, அட்டப்பள்ளம் மற்றும் பொத்துவில் செல்வபுரம் ஆகிய ஊர்களில் இன்று (11) திங்கட்கிழமை பொதுமக்களாலும்
இளைஞர்களாலும் அமோக வரவேற்பளிக்கப்பட்டன.
திராய்க்கேணியில் ஆலயம் மற்றும் ஊர்த் தலைவர்களான திருச்செல்வம் மகேந்திரன் மற்றும் மனோ ஆகியோர் வேட்பாளர் ஜெயசிறிலுக்கு மகத்தான வரவேற்பளித்தனர்.
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ஜெயசிறிலுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் அவருக்கே அளிப்பதாக உறுதியளித்தனர்.