இந்திய ரோடடரிக் கழக அங்கத்தவர்களுக்கும்-யாழ்ப்பாண ரோட்டரிக் கழக அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 08/11 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்-அரியாலையில் இடம்பெற்றிருந்தது.
இந்திய ரோட்டரிக் கழகங்களுடனான சந்திப்பில் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகம்,நல்லூர் ரோட்டரிக் கழகம்,யாழ்ப்பாண ரோட்டரிக் கழகம் மற்றும் வவுனியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தினரால் யாழ்ப்பாணம் விழிப்புணர்வற்றோர் சங்கத்திற்கு 165வெள்ளைப் பிரம்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத் தூதர் சாய் முரளி கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்தியன் ரோட்டரிக் கழக 3132 பிரிவு ஆளுநர் ராம் பிரபு,
இந்திய ரோட்டரிக் கழக முன்னாள் ஆளுநர் சம்பத் குமார,
தன்வந்திரி செயற்திட்ட இணைப்பாளர்,இந்திய ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.