அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டால் முதல் துரோகி திசைகாட்டி இரண்டாவது துரோகி வீடு!

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மீண்டும் தமிழின பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அதற்கு முதல் காரணம் திசைகாட்டி. இரண்டாவது வீடு. இந்த பழிபாவத்தை இந்த இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாண்டிருப்பில் தனது கட்சிக்கான பரப்புரைக் காரியாலயத்தை திறந்து வைத்து பேசிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ராஜ்குமார் பிரகாஷ் தெரிவித்தார் .

ரெலோ முக்கியஸ்தர் ஹெந்தி மகேந்திரன் வேட்பாளர்களான பி. கார்த்திக் த. கலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த திறப்பு விழாவில் பிரகாஷ் மேலும் பேசுகையில் ..
திசைகாட்டியில் 5 சிங்களர்களும் நான்கு முஸ்லீம்களும் ஒரே ஒரு தமிழரும் இறக்கப்பட்டு இருக்கின்றார்கள் .
இந்த தமிழரால் 38 ஆயிரம் வாக்குகளை பெற முடியுமா? கடைசிவரையும் முடியாது . ஆக 2000 வாக்குகளை பெற்று அதனை ஏனைய சமூகங்களுக்கு தாரை வார்க்க விரும்புகின்றார்.

மற்றவர் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்து இம் முறை தேர்தலில் பிள்ளையான் .
அம்பாறை மாவட்டத்தில் அவர் ஒரு ஒழுங்கையாவது போட்டு இருக்கின்றாரா?

அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமையாக தேர்தலில் நிற்பது சங்கு என்பதை மறந்துவிட முடியாது.

சிலவேளை 4 ஜேவிபி எம்பிக்கள் வந்தால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழரும் எம்பியாக வர முடியாது.
( வி.ரி. சகாதேவராஜா)