குற்ற புலனாய்வுப் பகுதியினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ச்து மன்னார் நகரில் சுமார் எட்டு லட்சம் பெறுமதியான கேரளாக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (08) இரவு மன்னார் நகரில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சந்தேக நபரிடம் சுமார் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன் வசம் வைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பொழுதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரையும் அவரிடமிருந்த கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மன்னார் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)