லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தப்பளை கொங்கோடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மரக்கறிகளை சேகரித்து ஏற்றச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இவ் விபத்து குறித்து இராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.