ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களை பிழையாக வழி நாடாத்துகின்ற ஒரு மகாப் பொய்யன் – அமீர் அலி

ஹிஸ்புல்லாஹ் தான் எம்.பி. ஆக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடிய ஒருவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அவர் நொந்து நூலாகிப் போன நேரத்தில் அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தோம்.

வெற்றி பெற்றதன் பின்னர் எங்களுக்குத் தெரியாமலே மஹிந்த ராஜபக்ஸவிடம் செய்று சுகாதார அமைச்சைப் பெற்றுக் கொண்டார்.

கோட்டாபாய ஜனாதிபதி தேர்தல் கேட்ட போது சஜித் பிரமதாசவுக்கு முஸ்லிம் சமூகத்தால் அளிக்கப்படவிருந்த வாக்குகளை குறைப்பதற்காக வேண்டி பசில் ராஜபக்ஸவின் கொந்தராத்து மூலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேர்தலில் போட்டியிட்டு சதி செய்தார்.

அவர், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை பிழையாக வழி நாடாத்துகின்ற, பொய்த் தகவல் சொல்லுகின்ற ஒரு மகாப் பொய்யன். இதை நான் சொல்லவில்லை. அவரது தலைவரே சொல்லி இருக்கிறார்.

அவர் ஒரு மகா நடிகன், அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரது தலைவர் சொல்லி இருக்கின்றார்.

தேர்தலில் 42 ஆயிரம் எடுப்போம் 52 ஆயிரம் எடுப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் சொல்லித் திரிகிறார். அவரால் இந்தத் தேர்தலில் 22 ஆயிரத்தை தாண்ட முடியாது.

அவர் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்கள் கல்குடாவுக்கு வழங்குவதாக சொல்லி ஏமாற்றியவர்.

அந்த விடயத்தில் காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாஹ் அநியாயம் செய்து விட்டார் என்று அன்று முதல் இன்று வரை பார்க்கிறனர்.

இனியும் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி சமூகம் உங்களது வார்த்தைகளை நம்பிக்கை கொள்ளும் என்றா? நீங்கள் எதிர்பார்கிறீர்கள்? என்று ஹிஸ்புல்லாஹ்விடம் அமீர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.