இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிப்பு

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் வீடமைப்புத் திட்டம் மொரனாகலை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடமைப்புத் திட்டத்தினை இந்தியாவின் உயர்ஸ்தாணிகர் சந்தோஸ் ஜா மற்றும் கிராமிய வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.வி . அத்தப்பத்து மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.வி.ரணதுங்கவும் கலந்து கொண்டு சம்பிரதாயபுர்வமாக திறந்து வைத்தனர்.

இவ் வீடமைப்புத் திட்டத்தில் 24 வீடுகளும் நீர்,மின்சாரம் உள்ளக பாதைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 44,494,678,00 ருபா செலவு செய்யப்பட்டுள்ளன இதற்கு மேலதிக மாக பிரதேச செயலாளர் பிரிவின் வீடுகளைப் பெறக்கூடிய குடும்பங்களை தெரிவு செய்துள்ளனர். இந்திய அரசாங்கம் ஒவ்வொறு வீட்டுக்கும் ருபா 5 இலட்சத்தினை உதவித் ;திட்டமாக வழங்கியது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நீர்விநியோக வடிகலாமைப்புச் சபை 5 இலட்சம் ருபாவும், மின்சார சபை 8 இலட்சம் ருபாவினையும் செலவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.