தமிழ் மக்களின் தீர்வுக்காக விருந்துபசாரத்தை தவிர்த்தவர் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் சீனாவிற்கு அமைச்சர்கள் குழு ஒன்று மாநாடு ஒன்றிற்காக சென்றிருந்தனர்.

குறித்த மாநாடு நிறைவுற்றதன் பின்னர் சகோதர இன அமைச்சர் ஒருவரினால் டக்ளஸ் தேவானந்தா அவர்களை விருந்து உபசாரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொண்டார். விருந்து உபசாரம் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சக அமைச்சரிடம், தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை நான் எந்த ஒரு விருது உபசாரத்திலும் மனமகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள மாட்டேன் என மறுப்பு தெரிவித்து இருந்தார்.

குறித்த சக அமைச்சர், அப்படியானால் நீங்கள் வாழ்நாளில் எந்த ஒரு விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ள மாட்டீர்கள் என நகைச்சுவையாக தெரிவித்து இருந்தார். அதனை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விருந்து உபசாரத்தை தவிர்த்துக் கொண்டார்.

அவருடைய மனதில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை களியாட்டங்களில் விருந்து பசாரங்களில் கலந்து கொள்ள போவதில்லை என உறுதியாக இருந்து நிச்சயம் தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் வரை அவருடைய அரசியல் போராட்டம் தொடரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்திருந்தார்.