கிழக்கில் நான்கு வருடங்களுக்கான வாழ்நாள் சாதனையாளர்களாக விருது பெறும் எட்டு பெருங் கலைஞர்களின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது .
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இன்று காலை புதன்கிழமை இதனை வெளியிட்டு வைத்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ம்ஆண்டில்
நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில்
“வாழ்நாள் சாதனையாளர்” விருது பின்வரும் கலையிலக்கிய
ஆளுமைகளுக்கு வழங்கப்படுகின்றது.
2021ம் ஆண்டு
மேனாள் மேராசிரியர். சி.மௌனகுரு – மட்டக்களப்பு .
2022ம் ஆண்டு
மேனாள் பேராசிரியர். எம் ஏ. நுஹ்மான் – அம்பாறை.
“கேணிப்பித்தன்” ச.அருளானந்தம் – திருகோணமலை.
2023ம் ஆண்டு
டிடபிள்யூ.. உபநந்த வெலிக்கல – திருகோணமலை.
“தாமரைத்தீவான்” . சோ. இராசேந்திரம் – திருகோணமலை
“மக்கத்தார்” ஏ.மஜீத் – அம்பாறை
2024ம் ஆண்டு
எஸ்எல்எம். ஹனிபா – மட்டக்களப்பு.
“வெல்லவூர்காேபால்” சீ. கோபாலசிங்கம் – மட்டக்களப்பு