சமூக சிற்பிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட கட்சிகளது வேட்பாளர்களின் கருத்துக்களம் இன்று (5) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் விநாயகபுரத்தில் நடைபெற்றது .
சமூக சிற்பிகளின் தலைவி நடராஜா நிஷாந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அமைப்பின் சட்டத்தரணி திருமதி மனோகரன் சுதர்ஷினி நிகழ்வின் நோக்கம் பற்றி விளக்கினார்.
மக்களுடன் கலந்துரையாட அரசியல் கட்சிகள் சார்பில் எட்டு வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தும் ஐந்து வேட்பாளர்களே மக்களுக்கு மதிப்பளித்து சமுகமளித்திருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளர் கி.ஜெயசிறில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தவமணி சுப்பிரமணியம்,புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வெ.ஜெயச்சந்திரன், ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எஸ்.நிரோஸன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் செ.இராசையா ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
மக்கள் தங்கள் கேள்விகளை கேட்டனர்.
அதற்கு வேட்பாளர்கள் பதிலளித்தனர்.
இயற்கை வளங்கள் சூறையாடல் காணி சுவீகரிப்பு அரச காணி பகிர்ந்தளிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் வெள்ளப் பெருக்கு முதலான ஏலவே ஒதுக்கப்பட்ட கேள்விகளை கேட்டனர்.
இலக்க அடிப்படையில் வேட்பாளர்கள் பதிலளித்தனர்.
தேர்தல் முடிந்த பின்னர் வெற்றியீட்டிய வேட்பாளரை அழைத்து இன்று வழங்கிய பதிலை நடைமுறைப் படுத்தல் தொடர்பாக வினவப்படும் என்று இணைப்பாளர் நிஷாந்தினி தெரிவித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)