மஹ்மூத் நடமாடும் நூலகம் திறந்து வைப்பு

அரச சுற்று நிறுபத்திற்கு அமைய நூலக வாரத்தினை முன்னிட்டு தேசிய வாசிப்பு மாதம் அக்டோபர் 2024 “வழி காட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் தலைமையில் பச்சை வீடு ௯டத்தில் இடம்பெற்றது.

மிக சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நடமாடும் நூலகத் திறப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். நடமாடும் நூலகத்தில் சமயம், அகராதிகள், நாவல், கல்வி, அறிஞர்கள், பாடப்புத்தகத்துடன் தொடர்பான நூல்கள், செய்தி பத்திரிகைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என பல்துறை சார்ந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இடைவேளை நேரத்தில் கல்லூரி சமூகத்தினர் பயன்பெறும் வகையிலும் வாசிப்பினை மாணவி மத்தியில் சமூக மயப்படுத்துவற்கான ஏற்பாடுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களினை கல்லூரியின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் அவர்களினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் எம்.எஸ் மனூனா, ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.