லவ்லேன் இளைஞர் பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

திருகோணமலையில் அமைந்துள்ள லவ்லேன் இளைஞர் பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 81 இளைஞர் யுவதிகளுக்கு NVQ Level – 4 சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (29) ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் என்.மதிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திரு எச்.யு. சுசந்த அவர்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தின் பரீட்சை மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு.சந்தன உயங்கொட, பயிற்சிப்பிரிவின் முகாமையாளர் மகிந்த, திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் என்.குகேந்திரா, லவ்லேன் இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஸ்ரனி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் லவ்லேன் இளைஞர் பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களும் கலந்து கொண்டனர்.