யாழில் 34 வருட காலமாக மூடப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு மீண்டும்!

யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது 34 வருட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த வீதி நீண்டகாலமாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் மூடப்பட்ட நிலையில் இருந்தது இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த போது குறித்த வீதியை திறந்து வைத்து மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார் அதற்க்கு அமைய குறித்த வீதி இன்றைய தினம் (01.11.2024) குறித்த வீதியானது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(சாவகச்சேரி)
R.திவாரகா