நவீன மயப்படுத்தப்பட்ட சதோச நிறுவனம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!

நவீன மயப்படுத்தப்பட்ட சதோச நிறுவனம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலகுவாகவும், மலிவாகவும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் மட்டக்களப்பு களியங்காடு பகுதியில் திறந்து வைக்கப்பட்ட சத்தோச நிலையமே இவ்வாறு நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரை அண்டிய மக்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஒரே இடத்தில் கொள்வனவு செய்து கொள்ளும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட கள்ளியங்காடு சத்தோச நிறுவனத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

சதோச நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் இசான் கொடகம, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் சுகத் குமாரசிறி மற்றும் மதத் தலைவர்கள், சதோச நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.