தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியால சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் கலை விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார நிகழ்வுகள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டன.
இப் பயிற்சி வகுப்பின் மூலம் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துடன் சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பயிற்சி நெறியின் வளவாளர்களான செல்வி.எம்.கே.திலினி மதுசிகா
மற்றும் திருமதி ஜெனிடா போல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு