ஆசிரிய கலாசாலை அணியின் எட்டாவது ஒன்றுகூடலும் மணிவிழா மற்றும் மணவிழாக் கொண்டாட்டமும்.

மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் எட்டாவது ஒன்று கூடலும் அணி உறுப்பினர் திருமதி டில்பிரபா அருள்பிரகாசத்தின் மணி விழாக் கொண்டாட்டமும் மற்றும் உறுப்பினர்களான நடா- வசந்தி தம்பதியினரின் 26 வது ஆண்டு மணவிழாக் கொண்டாட்டமும் சனிக்கிழமை(26) சிறப்பாக இடம்பெற்றது.

அணித் தலைவரும் பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் திருகோணமலை மற்றும் கோட்டைக் கல்லாற்றில் இவ் இரு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியின் திருகோணமலை தொடக்கம் திருக்கோவில் வரையிலான புலன அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்து சிறப்பித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)