எழும்பி பிரகாசி என்ற திட்டத்தின்கீழ் பாடசாலை மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கரவண்டி!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு எழும்பி பிரகாசி என்ற திட்டத்தின்கீழ் துவிச்சக்கர வண்டிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு 24.10.2024 மாலை நடைபெற்றது.

கிறிஸ்தவ குடும்ப சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இச்சபையின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டில் 42 மாணவர்களுக்கும்                     கடந்த வருடம் 31 மாணவர்களுக்கும் இவ்வருடம் 33 மாணவர்களுக்கமாக இதுவரை 166 வறிய  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்               இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ போதகர் எஸ். ஜேசுதாசன் தலைமையில்                                               செங்கலடி கிறிஸ்தவ குடும்ப சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக உணர்வாளர் என்.மோகன ராஜன் மற்றும் எஸ். ரகுபரன்                     உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கலடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த  பாடசாலை 

மாணவர்கள் இதன்போது                                                                    துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடாது தொடர வேண்டும் என்ற நோக்குடன் இத்திட்டம் அமுல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

ஏறாவூர் நிருபர் – நாஸர்