2000 கிலோ புள்ளி சுறா-இழுத்துச் சென்ற கடற்படையினருக்கு பொதுமக்கள் உதவி

பாறுக் ஷிஹான்

சுமார் 2000 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட இராட்சத புள்ளிச்சுறா கரைஒதுங்கிய நிலையில் அச்சுறாவினை ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லும் முயற்சியில் கடற்படையினருடன் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

அம்பாரை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று செவ்வாய்க்கிழமை(22) கரையொதுங்கி இருந்தது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள்  இதனை அவதானித்து கடற்கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறா மீனை கடற்படையினருடன் இணைந்து  மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்று பாதுகாப்பாக  அனுப்பி வைத்துள்ளனர்

மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் சுமார்   பல மணி நேர பிரயத்தனத்தின் பின்னர் குறித்த மீன் ஆழ் கடலுக்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.