தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும், திருகோணமலை மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான சண்முகம் குகதாசனின் தேர்தல் பிரசாரப்பணிகள் நேற்றையதினம் (20) மூதூர் கிழக்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலாவது துண்டுப்பிரசுரம் மூதூர் கிழக்கு சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ.அரசரெத்தினம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தன்னார்வ செயற்பாட்டாளர்களால், பாட்டாளிபுரம், வீரமாநகர், சீனன்வெளி, உப்புறல், இளங்கத்தை, இத்திக்குளம், பள்ளிக்குடியிருப்பு, நல்லூர், மலைமுந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் குகதாசனால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இன்றும் (21) மூதூர் கிழக்கில் பிரசாரப்பணிகள் இடம் பெற்று வருகின்றன.
பிரசாரப்பணிகளின் போது வேட்பாளர் சண்முகம் குகதாசனிற்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அ . அச்சுதன்)