காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் புதிய எலுவாங்குளம் ஜாலிய கிராமம் பகுதியில் வியாழக்கிழமை (17) அதிகாலையில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவரெனவும் தோட்டமொன்றில் காவலாளியாக கடமைபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்