பாராளுமன்ற உறுப்பினர் தொகையை ஆறாக குறைத்த பெருமை தமிழ் தலைமைகளையே சாரும்-

ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான டி.என்.ஏ உள்ளது.அது போலவே இந்த ஜனநாயக தேசிய கூட்டணியும் (டி.என்.ஏ) தனித்துவமானது.எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் எமக்கு பிரச்சனை இல்லை.போட்டி இருப்பது நல்லது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய தொகை குறையக் குறைய வேட்பாளர் தொகை அதிகரித்துச் செல்கிறது.
ஒன்பதில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தொகையை ஆறாக குறைத்த பெருமை எமது தமிழ் அரசியல்வாதிகளையே சாரும்.

எழுபது வருடங்களாக கதைத்த விடயத்தையே கதைத்துக் கதைத்து மக்களின் இருப்பை பற்றி சற்றும் சிந்திக்காமல் தமது சுயநலனை மாத்திரம் சிந்தித்திருக்கின்றனர்.
இதனால் தான் எம் மக்கள் வாய்ப்புக்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கருதி இடம்பெயர்ந்தனர்.
இதற்கு தீர்வு காணாது விட்டால் அடுத்த தேர்தலில் ஆறு எப்படி ஜந்தானது என்று கதைக்க வேண்டி வரலாம்.

வாய்ப்புக்கள் இருக்கும் போதே வெல்ல முடியாதவர்கள் இம்முறை செயல் வீரர்களைத் தாண்டி சொல் வீரர்கள் வெற்றி பெறுவது எப்படி? என மேலும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.