மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவனின் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த (12) இடம் பெற்றது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து சிறுவர்களின் மொழியாற்றல், பேச்சாற்றல், இலக்கிய அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதேச சிறுவர்சபை உறுப்பினர்களுக்கான விவாத போட்டிகள் நடைபெற்றன.
சிறார்கள் ஆர்வத்துடன் விவாத போட்டிகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன் அவர்களுக்கான நுண் உளச்சார்பு போட்டிகளிலும் பங்கு பற்றி தமது ஆளுமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் கழக அணியினர் வெற்றி வாகை சூடினர்.
இரண்டாம் இடத்தினை போரதீவுப்பற்று சிறுவர் கழக அணியினர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
செரி நிறுவனத்தின் நிதி அனுசாரனையையில் இவ் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ.மதிராஜ், செரி நிறுவன பிரதி தேசிய பணிப்பாளர் எல். ரூச்சான், மாவட்ட சமூக சேவை உத்தியோத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவள மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கடந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு