கன்னியா பகுதியில் நெல் அரிசி உற்பத்தி ஆலை திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள கன்னியா பகுதியில் நெல் அரிசி உற்பத்தி ஆலை ஒன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று திறந்து வைத்தார்.

குறித்த ஆலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்காகவும் பல உற்பத்திகளை இதன் மூலம் வேறு மாவட்டங்களுக்கு நெல் ஏற்றுமதிகளை முன்னெடுப்பதால் பல தொழில் வாய்ப்புக்களை இதன் மூலம் வழங்க முடியும் எனவும் குறித்த முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.