மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை இன்று (09) மேற்கொண்டிருந்தார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடினார்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வின் போது கிழக்கு மாகாண பிரதம செயலளார் ஆர்.எம். பி.எஸ். ரத்நாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.