மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (08) இடம் பெற்றது.
மாவட்டத்தில் தற்காலிகமாக மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் கலந்துரைடப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளிடம் கலந்தரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் கலந்து கொண்டார்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு