நிந்தவூர் றிஸாலா சமூக சேவை அமைப்பினால் அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச பள்ளிவாசல்களில் கடமை புரியும் நீர் இணைப்பு தேவையுடைய இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு இலங்கை நீர் வழங்கல் அதிகார சபையூடாக குடிநீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகவே, குடிநீர் இணைப்பு தேவைப்படக்கூடிய பள்ளிவாயல் இமாம்கள் மற்றும் முஅத்தின்களை அவசரமாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதன் நிபந்தனைகளாக, அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி 0767306333 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும், விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிட்ட 0767306333 எனும் வட்ஸ்அப் இலக்கத்தில் மாத்திரமே தொடர்பு கொள்ளவும், தங்களுக்கு நீர் இணைப்பு தேவைப்படுவதனை உறுதிப்படுத்தி பள்ளிவாயல் நிருவாக சபை அல்லது கிராம நிலதாரி ஆகிய ஒருவரினால் உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றினை வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்கவும், விண்ணப்பங்கள் 13.10.2024 ஞாயிற்றுக் கிழமை வரை மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.