காலம்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஐ.எம். அஸ்ஹரின் ஜனாஸா நேற்று முன்தினம் சனிக்கிழமை (05) இரவு 11.30 மணியளவில் சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மஸ்ஜிதுல் சாலிஹின் ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது அன்னாருக்காக துஆப் பிரார்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் இரங்கல் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நள்ளிரவு தாண்டிய நிலையிலும் ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள் , கல்வியியலாளர்கள , ஊர்ப் பிரமுகர்கள் , பழைய மாணவர்கள் , இளைஞர்கள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஐ.எம். அஸ்ஹரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஊடக மற்றும் பொது அமைப்புகளும் அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
(அஸ்லம் எஸ்.மெளலானா)