(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரை தேசிய ரீதியாக 58 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு தேர்தல் மாவட்டங்களில் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள போதிலும் மட்டக்களப்பு கடந்த (02) திகதி வரை 10 சுயேற்சைக்குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பிலேயே தற்போதைக்கு அதிகளவிலான சுயேற்சைக்குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை (04) திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.