புத்தளம் “அல் கலம்” மத்ரஸா வுக்கு பதிவுச் சான்றிதழ்.

( கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)    சுமார் 400  பிள்ளைகள் கல்வி பயிலும் புத்தளம்
“அல் கலம்” குர்ஆன் மத்ரஸா, அகில இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இந்த குர்ஆன் மத்ரஸாவுக்கான
பதிவு செய்யப்பட்ட சான்றிதழை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அகில இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு  அலுவலக திணைக்கள காரியாலயத்தில் இடம்பெற்றது.
“அல் கலம்” மத்ரஸாவின்  நிர்வாக உறுப்பினர்களான அஷ்ஷெய்க் பௌசான் காரி, வைத்தியர் முஹம்மது சஜீத், அஷ்ஷெய்க் ஆதிப் முஹ்சீன் ஆகியோர் பதிவு சான்றிதழை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
குறித்த மத்ரஸாவிலிருந்து பாடநெறியை நிறைவு செய்து விட்டு வெளியேறும் எத்துறை சார்ந்த நிபுணர்கள் ஆயினும் அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களாகவே காணப்படுவர்.
மிக விரைவில்  புத்தளம் மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள
வக்ப் செய்யப்பட்ட பெறுமதியான விசாலமான இடத்தில் அரச அங்கீகாரம் பெற்ற “அல் கலம்” பகுதி நேர மத்ரஸா நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.