ஓய்வு பெறும் உதவிக் கல்விப் பணிப்பாளருக்கு மல்லிகைத்தீவில் முதல் கௌரவிப்பு

சம்மாந்துறை வலயத்தில் கடந்த 36 வருடங்கள் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜாவிற்கு மல்லிகைத்தீவு அ.த.க.பாடசாலையில், பொன்னாடை போர்த்தி முதல் கௌரவிப்பு இடம் பெற்றது.

அவரது சேவையை பாராட்டி அதிபர் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.

அதிபர் எஸ்.ஜதீஸ்வரர தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில்
அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.நாசிர் அலி, ஆகியோருடன் முட்டைக்கோஸ் நண்பர்கள் வட்ட இணைப்பாளர் சமூக செயற்பாட்டாளர் பி. அனுசன், இலங்கையை 42 நாட்களில் சுற்றி வந்த எஸ்.கே முனாபிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

அதிதிகள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)