செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் பொருட்கள் விற்பனைச் சந்தை

மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விற்பனைசெய்யும்                                              சந்தை நடாத்தும் புதிய திட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை ஜோசப் நிகஸ்டன் இச்சந்தையினை                                                           ஆரம்பம் செய்தார்

இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டினையடுத்து                                                                சந்தை ஆரம்பமானது.

இச்சந்தையில் உள்ளுர் உற்பத்தி தீன் பண்டங்கள்,    பல்வேறு வகையான உணவுகள், மரக்கறிகள்,     காலை உணவுப்பொதிகள் மற்றும்  நாட்டுக்கோழிகள் என்பன விற்பனை செய்யப்பட்டன.

உள்ளுர் உற்பத்திகளுக்கு ஊக்கமளித்தல் மற்றும் வழிபாட்டிற்கு வருவோருக்கு இலகுவான முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் போன்ற                                       நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு                                                           இப்பொருட்சந்தை நடாத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின்மூலமாக பெண்களுக்கு  வாழ்வாதரத்திற்கான வருமானத்தை      அதிகரிக்கச் செய்யமுடியுமென நம்பப்படுகிறது.