கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 21 மாணவர்களுக்கு அதி திறமைச் சித்தி (9 A)

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2023 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 21 மாணவர்கள் சகல பாடங்களிலும் 7 இரு மொழிப்பிரிவு மாணவர்கள் உள்ளடங்கலாக அதி திறமைச் சித்தியினைப் (9A) பெற்றுள்ளனர்.

8 பாடங்களில் ஒரு இருமொழிப்பிரிவு மாணவன் உள்ளடங்கலாக 16 மாணவர்களும் , 7 பாடங்களில் ஒரு இருமொழிப்பிரிவு மாணவன் உள்ளடங்கலாக 10 மாணவர்களும் , 6 பாடங்களில் இரு இருமொழிப்பிரிவு மாணவர்கள் உள்ளடங்கலாக 16 மாணவர்களும் அதி திறமைச் சித்திகளைப் (9A ) பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)