கடந்த ஜனாதபதி தேர்தலில் கட்சியின் தீர்மானத்தினை ஏற்று கட்சியின் அம்பாரை மாவட்ட ஆதரவாளர்களை சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்க செய்த கட்சியின் போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (28) மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்பத்தில் இடம்பெற்றது.
இதன் போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்ததுடன், வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தல் செயற்பாடுகள் போன்றவை குறித்து அம்பாரை மாவட்ட பேராளர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, கட்சியின் தேசிய கொள்கைபரப்பு செயலாளரும் அம்பறை மாவட்ட செயற்குழு தலைவருமான கே.எம்.ஏ. ஜவாத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் போராளிகளெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)