திருமலையில் மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு..!

இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் சேவிங் ஹியூமானிட்டி பவுண்டேஷன் இணைந்து திருகோண மலை பிரதேச சர்வ சமயக் குழுவின் மாதாந்த செயல மர்வு புதனன்று (25) மாவட்ட சர்வோதய மண்டபத்தில் நடை பெற்றது.

இச் செயலமர்வில் சர்வசமயப் பெரிய வர்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோ சுத்தர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய மரபுகள், சித்தாந் தங்கள் பற்றிய தெளிவுகள், விளக்கங்கள் குறித்து இஸ்லாம் சமயம் சார்பாக மௌலவி ஹிதாயத்துல்லா அவர்களும் கிறிஸ்தவ சமயம் சார்பாக தேவநாதன் அவர்களும் விளக்கவுரை நிகழ்த்தினர்.

(ஹஸ்பர் ஏ.எச்)