மட்டக்களப்பில் இளம் மீனவர் படுகொலை!

 

மட்டக்களப்புகொக்குவில் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு இ பிரிவு வீட்டுத்திட்ட பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கை கலப்பில் 18 வயதுடைய இளம் மீனவர் ஒருவர் கத்தியால் குத்தப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது
நேற்று(2 7 ) இரவு 9 மணி அளவில் சம்பவம் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் தங்கேஸ்வரன் அபிலாஷ் என்ற 18 வயது மீனவர் தொழில் செய்யும் இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது

குறித்த படுகொலை சம்பவத்துடன் கைகலப்பில் ஈடு பட்டதாக கருதப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கொக்குவில் பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் மரண விசாரணைக்காக சடலம் வைக்கப் பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் குறித்த இளைஞர் மோட்டார் சைக் கிளை செலுத்தியது தொடர்பில் அப்பிரதேச குடும் பத்தார் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட தாகவும் இதன் போது சந்தேக நபர் பின்புறமாக வந்து பின்புறத்தில் கத்தியால் குத்தி பலத்த காயத்துக்குள்ளாக்கியதாகவும் பலத்த காயத்துக்கு உள்ளான இளைஞர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு சிகிச்சை உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி போதன வைத்தியசாலையில் மரணித்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கொக்குவில் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்சம்பவத்தில் பலியான இளம் மீனவர் திருமணம் ஆகாதவர் என்றும் இயந்திர இயந்திரப் படகில்சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர் என்றும் விசாரணை களில் தெரிய வருகிறது.