9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மூலம் முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களுக்கு ஆளுநர் நியமனத்தை வழங்கி உள்ளார். இதனை முன்னிட்டு வடமாகாண ஆளுநருக்கு சர்வதேச இந்து மத பீடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதாக அதன் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபராக அவர் பதவி வகித்த காலத்தில் மிகுந்த நேர்மையாகவும் மக்களுக்காக அர்ப்பணிப்புடனுமான சேவையிலும் ஈடுபட்டவர் என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். அவரது அந்த உண்மையான உழைப்புக்கும் நேர்மைக்கும் இந்த ஆளுநர் பதவி கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது அவரது சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.