கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களை சேர்ந்த உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட 24 பாடசாலைகளுக்கிடையில் இந்த வினாடி வினாப்போட்டி இடம்பெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயர்தர வர்த்தகப் பிரிவைச்சேர்ந்த (2024 ) மாணவர்களான
கே.துவிச்சன் , ,ஆர்.மிதுசான், ரீ.அபிச்சரிசன் ,ஆர்.தாட்சயன்
ஆகிய மாணவர்கள் பங்கு கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொண்டார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)