பிரபாலினி பிரபாகரன் கனடாவில் சர்வதேச பட விருதைப் பெற்றுக் கொண்டார்

ஜக்கிய அமெரிக்க ஸ்டுடியோ தயாரிப்பில் புஷ்பாஞ்சலி என்ற குறும்படம் கனடாவில் நடந்த டொரண்டோ தமிழ் சர்வதேச பட விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளது.
புஷ்பாஞ்சலி உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம் டொரண்டோ தமிழ் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு பெற்று விருது வழங்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் புஷ்பாஞ்சலி திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு பாடம் என்பதால் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது.
இந்த படத்தை அமெரிக்கா வாழ் இலங்கை தமிழ் பிரபாலினி பிரபாகரன் தயாரித்து உள்ளார் இவர் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
பிரபல பெண் ஒளிப்பதிவாளர் வைஷாலி ,கதை வசனம், எழுதி இயக்கியுள்ளார். வைஷாலி பிரபல ஒளிப்பதிவாளர், ஆர்.டி ராஜசேகர் அவரிடம் உதவியாளராக பணியாற்றி தற்போது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். இந்த குறும்படத்தின் மூலம் இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதை மீனா குமாரி எழுதி உள்ளார் இவர் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஜெ. அலிமிர்ஸக் அவர்கள் விஜய் டி.வி புகழ் நடிக்கும் போ ஸ்க்னல் என்ற படத்தின் இசை இயக்குனர் அருமையான இசையுடன் தேவாரம் பாடசாலையும் கம்போஸ் செய்துள்ளார். அந்த பாடலை ஜீ தமிழ் ஸரிகமப புகழ் அஷானி பாடியுள்ளார்.
ஒளிப்பதிவு ஹரிஹரன் ராமன்
கலை மதன்
உடையலங்காரம் பிரியங்கா ,ஒப்பனை கலை அருள் தேவி, எடிட்டிங் பாண்டி துறை, டப்பிங் யோஹ் பால் (சசிகலா ஸ்டுடியோ)
மிக்சிங் கிருஷ்ண மூர்த்தி (சசிகால ஸ்டுடியோ,
டொக்டர் நந்தா (வர்ண ஸ்டுடியோ)
சவுண்டு எபெக்டஸ் ரவிச்சந்திரன்
இணை இயக்குனர்கள் செல்வா பாண்டி, குரு கௌதம்
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை எதிர் நீச்சல் சீரியல் புகழ் (ஜானசி ராணி) காயத்ரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏழ்மையான குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்ட மனதை தொடும் சிறந்த படமாகும்.
அவருக்கு மகனாக சந்தீப் என்ற புதுமுகம் நடித்துள்ளார்.மகளாக சிறுமி வந்தனா நடித்துள்ளார் கான்ஸ்டபிள் ஆக தமிழ் சுரேஷ் என்பவரும் இன்ஸ்பெக்டராக சாலமன் மற்றுமொறு கான்ஸ்டபிளாக சங்கர் கலெக்டராக சாய் பாரதி மற்றும் பலர் நடித்த குறும்படம் ஆகும்.

இந்த விருதினை இக்குறும்பத்தின் தயாரிப்பாளர் திருமதி பிரபாலினி பிரபாகரன் பெற்றுக் கொண்டார். இவர் யாழ் யாழ்ப்பாண உள்ளூர் பாடகர் திருமலை எம்.பி பரமேஸ் மகள் அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர் அண்மையில் வெள்ளவத்தையில் தனது தந்தையின் உள்ளூர் பாடல்கள் படக் காட்சிகள் தயாரித்து வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் உடல் உறுப்பு தான தினத்தில் இவ்விருதினை பெறுவதில் பெருமை கொள்வதை தயாரிப்பாளர் தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானம் செய்தால் அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும். என்ற மாநில அரசின் அறிவிப்பை பெருமைப்படுத்தும் விதமாக இந்த குறும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு 23 ஆம் தேதி தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதி சடங்கில் அரச மரியாதை செய்யப்படும் என உத்தரவு பிறப்பிருந்தமை குறிப்பிடதக்கது. அதன் பிறகே உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.