சம்மாந்துறை வலய புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்கான போட்டிக் கண்காட்சி !

தேசிய புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சம்மாந்துறை வலயமட்ட போட்டி புத்தாக்க கண்காட்சி சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கண்காட்சியை பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யசீர் அரபாத், திருமதி நிலோபரா, பி.பரமதயாளன், உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட கல்வி சார் அதிதிகள் பார்வையிட்டனர்.

சம்மாந்துறை வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட வலய மட்ட புத்தாக்க போட்டியில் பத்து புத்தாக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட புத்தாக்க போட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ரிஎல். றைஸ்டீன் தெரிவித்தார்.