பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் காட்டு யானைகள்

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகளும் வெளிநாட்டு உல்லாச பிராணிகளும் அச்சத்தில் வாழும் நிலமை தோன்றியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மாலையிலும் இரவு வேளையிலும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த காட்டு யானைகள் தற்போது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் பெருமளவில் சஞ்சரிக்கும் பொத்துவில் உல்லை மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் பகல் வேளையில் சர்வ சாதாரணமாக நடமாட ஆரம்பித்துள்ளன.

கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள் உட்புகும் காட்டு யானைகள் குடியிருப்புகள் , மதில்கள் மற்றும் பயன்தரும் தென்னை, வாழை மரங்களுக்கும் பலத்த சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

அண்மைக்காலமாக காட்டு யானையின் தாக்கத்தினால் இப்பிரதேசங்களில்பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன

.