தனது வாக்கினை செலுத்தினார் அமைச்சர் ஜீவன் தொண்டமான் “

இலங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது

அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்க்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.

அமைச்சர் அவர்கள் வாக்களித்தப் பின்னர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

நாட்டினது எதிர்காலத்தினையும், மக்களினதும் எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு தமது ஜனநாயக கடைமையினை (வாக்களிப்பு) நிறைவேற்றுவதற்காக நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
(க.கிஷாந்தன்)