சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ,தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த 16 ஆம் திகதி , கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் , திருகோணமலை – மூதூர் கிழக்கு சேனையூரைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன் அவர்களுக்கு மக்களின் முரசு லங்காபுத்ர தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்ணபிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இம்மாபெரும் விருது வழங்கும் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல முன்னணி சிரேஷ்ட ஊடவியளர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர் ஏ.எச்)