சுவிஸ் நாட்டில் வசித்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் கோபிநாத் அகாலமரணமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
சுவிஸ் – சூரிச் கிளாட்புறுக்கில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் அவர் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின்பேரில் 40, 54 வயதுடைய இருவர்அ சூரிச் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் குழந்தை ஒன்றின் தந்தையான இவர் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.
சமூக அக்கறை கொண்ட குறித்த இளைஞன் திருமலை மண்மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் இருந்தார். குறிப்பாக கோணேசர் ஆலயம் தொடர்பிலான ஆவணங்கள் தேடும்பணியில் ஈடுபட்டு வந்தததையும் அவதானிக்க முடிந்தது. மிகவும் துடிப்பான குறித்த இளைஞனின் இழப்பு எமது மண்ணுக்கு பேரிழப்பாகும்.