விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்கள்! விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மகேசன் நேரில் சென்று கையளித்தார்

விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு அபிவிருத்திணைக்களம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு ஒரு தொகுதி கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி வைத்தது.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அதனை நேரில் சென்று பாடசாலை அதிபர் எம். சுந்தரராஜனிடம் வழங்கி வைத்தார் .

இதற்கு இணைப்பாளராக இருந்து செயல்பட்ட பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா மற்றும் பிரதி அதிபர் திருமதி அருந்தவவாணி சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.